புதன், 6 அக்டோபர், 2010
கேட்டிங்களா கேட்டிங்களா எந்திரன் சினிமா விமர்சனம் கேட்டிங்களா கேட்டிங்களா
உலக சினிமா, உள்ளூர் சினிமா கமெர்சியல் சினிமா, அவார்டு சினிமா ,மசாலா படம் .என தாறுமாறாக தரம் பிரித்து பதிவுலக அன்பர்கள் பலர் விமர்சனம் எழுதுகிறார்கள் .
அதுவும் தற்போது எந்திரன் படம் வெளி வந்திருக்கிறது .அதை பற்றிய விமர்சனம் அப்படம் வெளி வருவதற்கு முன்பும் வெளியான பின்பும் சுமார் ஆயிரம் விமர்சனமாவது வெளியாயிருக்கும் .
அவரவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்துளார்கள். இதில் தவறேதும் இல்லை. இந்த பதிவுகளுக்கு பின்னூட்டத்தில் சண்டையிடும் நம் நண்பர்களை நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கிறது .
அது ஒரு படைப்பு அவ்வளவுதான். அதில் குறை இருந்தாலும் நிறை இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதோ சுட்டி காட்டுவதோ அவரவர்களின் உரிமை இதற்காக தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் மோதிகொள்வது ஏனோ!!
எனக்கும் கருத்துகள் உண்டு. நானும் எழுதலாம் சங்கரின் படங்கள் எல்லாம் ஒரு பிரம்மாண்டம் உள்ளடங்கிய படம்களாக இருக்கும்.
ஆனால் அதனுள் சில பகுதிகள் நம்மை கட்டிப்போடும் உதாரணமாககல்வியை இலவசமாக மக்களிடம் இருத்து பிரித்து (வழக்குக்காக கோர்டில் காட்டுவது ) மக்களுக்கே கொடுப்பது போல்.. இந்தியனில் லஞ்சம் இல்லாத இந்தியா, அந்நியனில் ஜப்பான் மற்றும் சிங்கபூர் இருந்த நிலையும் இப்ப அடைந்த முன்னேற்றமும் காண்பித்திருப்பார். சிவாஜியில் மணி கார்டு திட்டம் என சின்ன சின்ன சீன்கள் வைத்து ஈர்த்தாலும் மொத்த படத்தில் அவரின் பழைய படங்களின் சாயல் தெரியும் .
ஆனால் தமிழ் படங்களை வெளி ஆட்கள் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்களில் அவர் ஒருவர். ஆனால் அவருடைய ஒரே மாதிரியான படங்கள் தமிழில் வேண்டுமானால் ஏதாவது மாற்றத்துக்கு ஏங்கும் நம் மக்களிடம் ஓடும். ஹிந்தியில்??.. அவரின் நாயக் படம் ஓடாதது ஒரு உதாரணம்.இப்படியெல்லாம் நான் சங்கர் அவர்களையும் அவர் படங்களையும் விமர்சிக்கலாம் .
ரஜினியை பற்றி அவர் கேரக்டர் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம். மிக எளிமையானவர் படங்களில் தெளிவான பாதையில் செல்லும் அவர் வாழ்வில் சில நேரங்களில் சாரி பல நேரங்களில் ஒரு நிலையான முடிவில் அவரால் நிற்க முடிவதில்லை. காவிரி பிரச்சினையில் நெய்வேலியில் கலந்துகொள்ளாமல் ஒரு முடிவு எடுத்தார். பின் எதிர்ப்பை கண்டு உண்ணாவிரதம் இருந்தார். ஒகேனக்கல் பிரச்சனையில் முதலில் கர்நாடகாவில் வன்முறை செய்பவர்களை உதைப்பேன் என்றார். பின்னர் அங்குள்ள டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நான் இனிமே அப்படி மாத்லாடாது என்று பேசினார்.
தற்போது தி ரோபோட் ஹிந்தி பட விளம்பரத்திற்கு போன போது பால் தாக்கரேயை சந்தித்தது குறித்து ரஜினி கூறியதாவது:-
நான் மும்பை வரும் போதெல்லாம் பால் தாக்கரேயை சந்திக்க நினைப்பேன். முடியவில்லை. இப்போது தான் அது நடந்துள்ளது. பால்தாக்கரே எனக்கு கடவுளை போன்றவர்.இவ்வாறு ரஜினி கூறினார்.
இதை பற்றி முஸ்லிம்கள் யாராவது எதிர்த்தால் பல்டி அடித்து விடுவார்….இப்படியெல்லாம் தனி மனித விமர்சனம் எழுதலாம்தான்.
ஆனால் ஒரு விஷயத்தை பார்க்க வேண்டி இருக்கிறது. என்னதான் எந்திரன் பலருக்கு பிடிக்கவில்லை எனிலும் அதற்காக உழைத்த உழைப்பு Technical விசயங்கள் ! அதை விளம்பரபடுத்த சன் டிவியின் தந்திரங்கள் எல்லாம் ..பல புதிய விசயங்களுக்கு சந்தைக்கு பாதை விரிக்கின்றது.
இது வரை எழுதிய நண்பர்களின் விமர்சனம் எல்லாம் அதை மேலும் விளம்பரம்தான் படுத்துகிறது ....
இது வரை எந்திரன் பற்றி எழுதிய எழுத்துகள் எல்லாம் எந்திரனை மட்டுமோ
அது இல்லை என்றால் அதை எழுதியவர்களை மட்டுமே பிரபல படுத்துகிறது.
காய்த்த மரமே கல்லெறி படும் என்ற கதைப்படி கல்லெறி விழுந்தது எல்லாம் மரத்திற்கு என்றாலும் அதில் லாபமும் அதற்குத்தான். சினிமாவை சினிமாவாக பார்க்க எல்லாம் படிக்கவேண்டும் போல இத்தனை பணம் செலவழித்து எடுத்தவர்கள் இந்த வாய்ப்பின் மூலம் உலக சினிமாவாக ஆக்கும் முயற்சில் வேண்டுமானால் தோல்வி அடைந்திருக்கலாம் .ஆனால் போட்ட காசை எடுத்து விடுவார்கள்.
எல்லோரும் போல நாமும் திட்டி விட்டோ புகழ்ந்து விட்டோ எந்திரன் அலையில் நீந்ததான் போகிறோம்----)
இனி பதிவுலகில் அடித்துக்கொள்ள கமல் படமோ அடுத்த சூப்பர் ஸ்டார் படமோ எப்போ வருமோ ! ????!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக