ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒதுக்கப்பட்டவர்கள்

                                                       
 சற்று நாட்களுக்கு முன்பு என் பள்ளி தோழன் ஒருவனை கண்டேன்என்னால் நம்பவே முடியவில்லை .பள்ளியில் எல்லா ஆசிரியிர்களிடமும்மானாவாரியாக திட்டு வாங்குபவன் அவன் .தினமும் எதாவது ஒரு பிரச்சனயில்மாட்டிக் கொள்வான்.
                                   ஒரு முறை ஒரு தேர்வுக்கு முன்பு தலைமை ஆசிரியர் அக்கறையாக அறிவுரை கூறிக்கொண்டிருந்த போது சிரி சிரி என கொஞ்சம் ஓவராக சிரித்து விட அசெம்ப்ளி ஹாலில் துரத்தி துரத்தி அடித்தார் .
                                          எல்லாரிடமும் உருப்பட மாட்டன்னு பேரு வாங்கியவன் இன்று சவுதியில் 20 பேரு வேலை பார்க்கிற சூப்பர் மார்க்கெட்டின் முதலாளி .இதை நான் பொறாமையில் சொல்லவில்லை அவனிடமே கேட்டேன் டேய் இப்ப உன்னை பார்த்தால் நீயெல்லாம் வாழ்க்கையில் எப்படிரா முன்னேருவ என்று கேட்ட எல்லாரும் ஆச்சரிய படுவாங்கன்னு அதற்கு அவன் கூறிய பதில்தான் இந்த பதிவே எழுத காரணம்.

என்னடா பண்றது எனக்கு மனப்பாடம் பன்ற சக்தி குறைவு .நானும் கஷ்டப்பட்டு படிப்பேன் எந்த கேள்விக்கு எப்படிபதில் எழுதனும்னு தெரியாது அதுவுமில்லாம எதை படிக்கணும் எதை படிச்சா ஈசியா நல்ல மார்க் வாங்கலாம்ன்னு தெரியாது .
                                                             எங்க அப்பா வெளிநாட்டுல இருந்தாரு எங்கம்மாவுக்கு என்னை நிறைய படிக்க வைக்கணும்ன்னு ஆசை . கிராமம் இப்ப மாதிரி சொல்லிதர ஆளில்ல என்றான்.
                                        ஊருல எந்த பொறுப்பான வேலைன்னாலும் என்கிட்டதான் சொல்வார்கள் அந்த அளவு பொது அறிவு இருந்த எனக்கு . நம்ம நாட்டு படிச்சுட்டு ஒப்பிக்கிற பாடத்திட்டம் ஒன்னும் சரி வரல .
ஏதோ
 எங்கப்பா வெளிநாட்டுல இருந்ததால நான் இங்கே வந்தேன் இங்கே என்னோட பொறுப்பான நிர்வாகம் கடின உழைப்பு எல்லாம் பார்த்த முதலாளி என்னிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தார் இன்று என் நேர்மையான உழைப்பாலும் ஒரு கடை நான் எடுத்து நடத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளேன் என்றான்.
                                                             அது சரிதான் நம் தமிழ் நாட்டை வெளியே வந்து பாருங்கள் நல்ல ஆங்கிலம் தெரிந்தால் ஓகே இல்லை என்றால் உங்களால் இந்தியாவிற்குள்ளே எங்கே போக வேண்டும் என்றாலும் கஷ்டம்தான் 
மலையாளிகளை பாருங்கள் அவர்களுக்கு பள்ளி பாடத்திலே ஹிந்தி வருவதால் வெளிநாடுகளுக்கு வந்தால் ஈசியாக நம் அயல் தேச வாசிகளை (பாகிஸ்தான் , நேபாளம் ,பங்களாதேஷ் ,ஆப்கானிஸ்தான் என ) பேசி சமாளிப்பார்கள் .அதன் மூலம் நல்ல உயர் பதவிகளுக்கு வந்து விடுவார்கள் .
                                                     நாம் தமிழை வளர்க்கிறோம் என்று ஹிந்தியை எதிர்த்தோம் சரி ஆனால் அதை படிக்காமலே விடசெய்யபட்டோம் ஏனோ தெரியவில்லை .
                                                       இன்று நாடாளுமன்றத்திற்கு போகும் நம் எம் பிக்கள் கூட ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் சரி அது எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் நம் ஆட்களுக்கே புரிந்ததோ என்னவோ ( எழிதி கொடுப்பதை தானே படிக்கிறார்கள் ).வட இந்தியாவில் என்ன எல்லா பகுதிகளிலும் படித்தவர்கலையா எம் பியாக தேர்ந்து எடுக்கிறார்கள் ஒரு நாள் நேஷனல் டிவி பாருங்கள் பார்லிமண்டில் என்ன நடக்கிறது என்று
                                                      3  idiots  படத்தில் வருவது போலத்தான் நம் கல்விமுறையும் இருக்கிறது .உதரணத்திற்கு நமது அண்ணா பல்கலை கழகத்தால் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கையே 200 தாண்டும் (உதவி : http://www.winentrance.com/engineering_colleges/tamil_nadu/  )  ஒவ்வொரு கல்லூரியிலும்  ஆண்டுக்கு எத்தனை பேர் வெளியாகிறார்கள் அத்தனை பேருக்கும் வேலைக்கு எங்கே போவது தமிழ் நாட்டுக்குள்ளே எல்லோருக்கும் வேலை கிடைத்து விடுமா யாரும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லவேண்டாமா பின் எப்படி தமிழ் மொழி மட்டும் போதும் .
                                           நம் மக்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது ஒருத்தர் தன் பிள்ளையை பொறியியல் கல்லூரியில் சேர்த்தால் நாமும் சேர்த்து விடுவது .அதுவும் கம்ப்யூட்டர் துறையை தவிர இன்ன பிற துறைகள் திரும்பி கூட பார்க்க கூடாது அதை பற்றி எழுத வேறு பதிவில் பார்க்கலாம்
என் நண்பன் கதைக்கு வருவோம் அவன் வெளி நாட்டிற்கு வந்தான் பணம் அந்தஸ்து எல்லாம் பெற்றுக்கொண்டான் அதற்காக அவன் இழந்தது அதிகம் என்றாலும் இன்று நல்ல நிலையில் இருக்கிறான்
அவனைப் போலவே இருந்த என் பள்ளித் தோழர்கள் பல பேர் இன்று அடிமட்ட கூலித் தொழிலாளியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .
                                       சொல்லிக் கொடுத்ததையும் எழுதி கொடுத்ததையும் திருப்பி எழுதினால் சிறந்த மாணவர்கள் என்ற தேர்வுமுறை மாறி வாழ்க்கைக்கு பயனாகிற முறையில் பாட முறை என்று வருமோ தெரியவில்லை .
                                           மனப்பாடம் செய்து எழுதி வெற்றி பெற்ற முந்தைய சமுதாய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அதில் சிறந்தவர்களாக வளர்த்து விடுகிறார்கள் .
                                    இவ்வாறு உருவாகிய சமுதாயம் எங்கே புதிய முறையில் சிந்திக்கும் இதனால் கிடைத்த அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் (எல்லாருமல்ல ) எங்கே நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வார்கள்.
                                    தானே சிந்திக்கவும் தானே செயலாற்றவும் செய்யும் பாட முறையும் வாழ்க்கை முறையும் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கும் காலம் விரைவில் வரும். ---)
                                                                                         

3 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது உண்மை தான் பாஸ். தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்த பிரச்சினை. மற்ற மாநிலங்களில் அது இல்லை. நீங்கள் சிந்திக்கின்ற நடை முறையில் எப்போவோ நம் மாநிலம் முன்னேறி இருக்க வேண்டும். குறுக்கீடுகள் நமது தானை தலைவர்கள் தான். இது மாதிரி நிறைய எழுத வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  2. நன்றி தலைவா தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும்

    பதிலளிநீக்கு
  3. //நீங்கள் சிந்திக்கின்ற நடை முறையில் எப்போவோ நம் மாநிலம் முன்னேறி இருக்க வேண்டும்.//

    அசுகு... புசுகு.... முன்னேறமத்தான், சென்னையில இருந்து, கன்னியாகுமரி வரைக்கும்... கூலி வேலை செய்ய, இந்திக்காரவுக வந்திருக்காங்களாக்கூ?? பேசற, பழமையப் பாருங்க.... க்கும்...

    பதிலளிநீக்கு