செவ்வாய், 28 செப்டம்பர், 2010
ஆதலால் காதல் என்பது
காதல் ஒரு மின்சார வார்த்தை . சொல்லும் போதும் கேட்க்கும் போதும் ஒரு சந்தோஷ மின்னல் ஏற்படும். எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் காதல் பாடல்கள் தான் பெரிய வெற்றியையும் அடையாளத்தையும் கொடுத்திருக்கும் .எல்லா பாடகர்களுக்கும் அங்கீகாரம் காதல் பாடல்களால் தான் ஏற்பட்டிருக்கும் .
பெரும்பாலும் இயக்குனர்களின் முதல் படம் காதலையே மையமாக கொண்டிருக்கும் .கதைகளில் உலகில் அதிக அளவில் வெளிவருவதும் காதல் கதைகளே .கவிதைக்கு கேட்கவா வேண்டும் காதலை பற்றி எழுதும் போது இறைவன் கூட கீழே வைத்துதான் எழுதப் படுவான்.
காதல் இல்லாத கதை இல்லை கவிதை இல்லை நாடகம் இல்லை சினிமா இல்லை .இத்தனைக்கும் உயர்ந்ததா இன்றைய காதல் .
இன்றைய திரைப் படங்களில் ஐந்து வயதிலே காதல் ஏற்படுவதாகவும் அந்த காதலை சுமந்தே நாயகனோ நாயகியோ வளர்வது போலவும் தான் காண்பிக்கிறார்கள். அதையும் நாம் வாய் பிளந்து ரசிக்கிறோம் .
உண்மையில் நம் குழந்தை யாரையாவது ஐந்து வயதிலே காதலித்தால் ஏற்று கொள்வோமா ஐந்து என்று இல்லை பத்து வயதில் கூட காதல் வருவது என்பது சாத்தியமா !!!
இன்று தனக்கு காதலனோ காதலியோ இல்லை என்றால் பெரிய குற்றம் என்பது போல் இருக்கிறார்கள் நம் இளைய சமுதாய மக்கள். .கண்டதும் காதல் என்பது ஒரு அழகற்ற ஆணிடமோ பெண்ணிடமோ ஏற்படுகிறதா. காதலுக்கு முதல் தேவையே அழகாகத்தான் கருதப்படுகிறது .
இனி பதினைந்து வயதிலே காதல் வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள். அது என்ன வயது அந்த வயதில்தான் ஒரு மனிதனின் எதிர்காலமே தீர்மானம் ஆகிறது .அந்த வயதில் அவன் தேர்ந்து எடுக்கும் படிப்பும் துறையும் தான் அவன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது .
இன்றைய நிலை நான் என்னை சுற்றி உள்ள என் வீட்டை சுற்றி உள்ள ஆட்களை கவனித்த உண்மை சம்பவங்களையே குறிப்பிடுகிறேன் .எனது வீட்டை அடுத்த ஒரு பெண் இல்லை சிறுமி.. அவள் படித்துக் கொண்டிருந்தது ஒன்பதாம் வகுப்பு , வீட்டின் செல்லப் பெண் அவளை சுற்றி சுற்றி ஒரு பையன் அலைந்து கொண்டிருந்தான் . அழகிய பெண் அவள் அவனோ எட்டாவதிலே மட்டையை போட்டுவிட்டு எடுபிடி வேலை பார்த்து சுற்றிக்கொண்டு இருந்த ஒரு பதினெட்டு வயதுக்காரன் .
எப்படியோ இவர்களுக்குள் பாழாய் போன காதல் பற்றிக் கொண்டது . அது வீட்டில் தெரிய படிப்பை நிப்பாட்ட பறவைகள் பறந்து விட்டன .. ஐந்து வருடம் கழிந்து அந்த பெண்ணை ஓரிடத்தில் பார்த்தேன் ஏதோ வேலை பார்க்கிறது போல இரண்டு குழந்தைகள் வேற அவன் என்ன செய்கிறானோ இல்லை விட்டு விட்டு போய்விட்டானோ ,,,
தெரியவில்லை. பிடித்த ஆடை பிடித்த உணவு என பார்த்து பார்த்து கொடுத்தவர்கள் பிடித்த வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுக்க மாட்டார்களா.
காதல் என்றதும் ஏன் பெற்றவர்கள் பதறுகிறார்கள். காதல் கண்ணை மறைக்கும் துணையின் நல்ல விசயங்களையே மட்டுமே காட்டும் அவன்தான் உலகில் அவன் மட்டும்தான் நல்லவனாய் தெரிவான் . . நம் காதலை எதிர்ப்பவர்கள் கொலை காரர்களாக தெரியும் .ஆனால் உண்மை வேறு .
உலகில் எத்தனை காதலர்கள் சந்தோசமாய் கடைசிவரை ஒன்றாக இருக்கிறார்கள்.
எந்த ஒரு விசயமும் எதிர்க்கும்போதும் தடை செய்யும்போதும் தடுக்கும்போதும் அந்த விஷயம் நம்மை செய்ய தூண்டும் . அது போலத்தான் பெற்றோர்களாலும் சுற்றி இருப்பவர்களாலும் எதிர்க்கப் படுகிற காதல் நம்மை இழுக்கிறது .
திடீர் என்று எல்லோ பெற்றோரும் தங்கள் பிள்ளைகளிடம் யாரை வேண்டுமானாலும் விரும்பு ஆனால் அவர்கள் நல்ல படித்தவர்களாக நல்ல வேளையில் உள்ளவராக இருக்கணும் நம்ம மதத்தில் இருக்கணும் நம்ம சாதிக்குள் இருக்கணும் என்று ஒரு கண்டிசனோடு காதல் செய்ய சொல்லுங்கள் அவர்கள் நீங்களே நல்ல வரனை பாருங்கள் என்று
சொல்வார்கள்
யாரும் இதை படிக்கும்போது இல்லை காதலுக்கு பணம் காசு ,அந்தஸ்து தகுதி எல்லாம் கிடையாது அது பார்த்து வருவது காதலே கிடையாது என்று கூறினால் அப்படி பார்த்து வந்தால் ஏன் நீங்கள் ஏற்று கொள்ளமாட்டிர்களா என்று நான் கேட்கிறேன்
அப்படி பார்த்து செலக்ட் செய்து தாய் தந்தை அனுமதியோடு திருமணம் செய்து கொண்டு க்ககககா காதல் செய்யுங்களேன் .
அப்படி திருமணம் செய்த பிறகு "நீயின்றி நிலவில்லை " என்று பாடி உங்கள் துணையினோடு காதல் செய்யுங்கள்
நான் ஒன்னும் காதலுக்கு எதிரி அல்ல காதல்களும் காதலர்களும் எனக்கு விரோதிகளும் அல்ல .
காதல் அது புனிதமானது என்று கூறி அந்த பெயரில் வீட்டை விட்டு ஓடி கஷ்டப்பட்டு பொருளாதார பலமில்லாமல் குழந்தைகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கும் நல்ல உணவும் கல்வியும் அளிக்க முடியாமல் .இல்லை ஏமாற்று பேர்வழியை நம்பி ஓடி பிள்ளை பெற்று நடுத்தெருவில் விட்டு விட்டோ குப்பை தொட்டியில் போட்டு விட்டோ ஒரு ஆதரவற்ற சமுதாயத்தை காலகாலமாக காதல் என்ற பெயரில் உருவாக்கும்
அற்பக் கூட்டத்தைதான் எதிர்க்கிறேன்
இன்றைய சமுதாயம் சினிமாக்களையும் சீரியல்களையும் அதில் காட்டப்படும் காதல்களையும் கண்டு நாமும் காதலிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் பட்டவர்கள் போல் நடந்து கொள்வதை கடந்து ஓர் ஜப்பானை போல தொழில்நுட்பத்திலும் சீனாவை போல புதிய புதிய தொழில் செய்து வேலை வாய்ப்பை பெருக்கி வருமானத்தையும் வசதிகளையும் பெருக்கி தாங்கள் விரும்பிய பெண்ணையோ ஆணையோ முறையே கேட்டு எல்லோரின் முன்னிலையில் திருமணம் செய்து சாகும் வரை ஒன்றாய் இருந்து காதல் செய்து வாழனும் என்பதே ஏன் ஆசை .
கலை படைப்பாளிகளே உங்களிடம் ஒரு கோரிக்கை உங்கள் கதைகளும் படம்களும் காதலை மட்டும் கருவாக கொள்ளாமல் பல வித சிந்தனைகளையும் மாற்றத்தையும் கொண்டுவரக் கூடியதாகவும் இளைய சமுதாயத்தை நேர்வழியில் நடந்த கூடியதாகவும் இருக்கட்டும் அதை விட்டு கல்லாவை நிரப்ப எதையும் காட்ட துணியாதிர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


காதலைப் பற்றி இவ்வளவுதானா? இன்னுமிருக்கா?? நமக்கு இதெல்லாம் தெரியாம போச்சே!! ஹி ஹி
பதிலளிநீக்குஆமா ஏன் பாஸ் இன்னும் தமிளிஷ் தமிழ்மணத்திலும் இணைக்காமல் வைத்திருக்கிறீர்கள்??
பதிலளிநீக்குநன்றி அன்பரே .
பதிலளிநீக்குஇதோ இன்றே இணைத்து விடுகிறேன்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .