ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சவுதிக்காரன் வைத்த ஆப்பு

                                                     
 எல்லோருக்கும் தன் ஏமாற்றத்தையும் ஏமாந்ததையும் வெளியில் சொல்ல வெட்கமாக இருக்கும்தான் .அப்படி ஒரு சம்பவம் நடந்ததாலும் அதை கொஞ்சம் பில்டப் பண்ணி கௌரவமா ஏமாந்த மாதிரிதான் வெளியில சொல்வாங்க .(வேற வழி).
                               நான் அப்படியெல்லாம் இல்லாம நடந்தத சொல்றேன்  (ஹி ஹி )..நானும் எல்லோரையும் போல திரவியம் தேட Airindia  ப்ளைட்ல கடல் தாண்டி சவுதி வந்தவன்தான் . இந்த நாட்டுக்காரங்க எவனும் வேலைக்கு போக பிரியபடுறது இல்ல. (அதனாலதான நான்லாம்  இங்க வந்திருக்கேன் ) வேலைக்கு போகத்தான் மாட்டங்க ஏமாத்தறதுக்கு உட்காந்து யோசிச்சு வித விதமா திருடுறதுல கில்லாடிங்க .
                                 அப்படி திருடிய சம்பவங்களா நண்பர்கள் கூறும் போது ,அவங்கள பஞ்சர் பட்ட இடத்துலையே நம்மளும் கொஞ்சம் குத்தி விட்டுட்டு நான் மட்டும் அந்த இடத்துல இருந்துருந்தா அப்படின்னு ஒரு கதை சொல்லி நூலாக்கி அனுப்புவோம் .                                            எனக்கும் அப்படி ஒரு நிலைமை வரும்னு அப்ப யாருக்கு தெரியும் .சவுதி தேசத்தின் தலை நகரில் கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் இந்தியர்களில் நானும் ஒருவன் .சர்வீஸ் மட்டும் இல்லாம அவங்கவங்க ராசிப்படி ஒரு வாரமோ ஒரு மாசமோ வொர்க் பண்ணுகிற சீன தேசத்து தயாரிப்புகளையும் சேர்த்து விற்கிறோம்
சில நேரம் இந்த நாட்டு மக்கள் எந்தெந்த மாடல்களை விரும்புவாங்க என்று தெரியாம வங்கி குவித்த பொருட்கள் யாராவது கேட்டா அதை இதை சொல்லி வித்து விடுவோம் .
                              ஒரு நாள் இப்படிதான் விக்காத  ஒரு மவுச  (mouse ) ஒருத்தன் கேட்டான் அப்பாடா எப்படியாவது தள்ளி விட்ருவோம்னு நினைச்சி 25 ல ஆரம்பிச்சு 18 ரியாலுக்கு தரேன் என்று பேசி முடித்தேன் .அவன் 500  ரியால எடுத்து நீட்டினான் .இதுக்கு போய் சில்லறை கொடுக்கவா என்று நினைத்து சில்லறை மாத்திட்டு வான்னு அனுப்பினேன்.
                         வெளியில் சென்ற அவனுக்கு பதிலாக அவனோடு வந்த இன்னொருத்தன் வந்தான் . "என்னப்பா நான் சில்லறைக்கு எங்க போக ஒன்னுக்கு ரெண்டு மவுசா கொடு" என்றான் நானும்  வாயில் எச்சி வடித்து கொண்டு எப்பாடா சிக்கிட்டான் என்று ரெண்டு மௌசையும் மீதி சில்லரையும் கொடுத்தேன் .அப்ப அந்த நல்லவன் கொடுத்த சில்லறையில் 2  நூறு ரியல் நோட்டுக்கு 50 ,50 ரியலாக கேட்டான்.. கொடுத்தேன். ஒரு நூறு ரியாலுக்கு 10  ரியால் சில்லரையாக கேட்டான் அப்பவாது சுதாரிசிருக்கணும் அதையும் கொடுத்தேன். அதை என் முகத்தை நோக்கி நீட்டி இரண்டு முறை எண்ணினான் .
                                         அந்த நேரத்தில் முதலில் மௌஸ் விலை கேட்டு வந்தவன் வந்தான். சீக்கிரம் வா போனும் என்றான். அப்ப எவ்வளவுக்கு வாங்கினாய் என்று கேட்டான். அதற்கு அவன் ஒன்னு பதினெட்டு என்று ரெண்டு வாங்கினேன் என்றான். உடனே அவன் என்னது பதினெட்டா என்னிடம் பத்து ரியால் தான சொன்னான் .உன்னிடம் பதினெட்டு ரியால் என்று எப்படி வாங்கலாம் என்று சண்டைக்கு வந்தான் .
                           உடன் சில்லறை சில்லறையா கேட்டு வாங்கிய அந்த சில்லறை பய என்னிடம் திரும்பி என்னை என்ன நினைத்தாய் .எப்படி இப்படி செய்யலாம் என்று நான் கொடுத்த சில்லறையை என் முன்னே நீட்டி நீட்டி கத்தினான்  .எனக்கு சிரிப்பாக வந்தது "விளையாடாதீர்கள்" என்று கூறினேன்.  உடன் ரெண்டு பேரும் சேர்ந்து என் குடும்பத்தயே ஒவ்வருவராக  திட்டி தீர்த்தார்கள் .
                        எனக்கு கோப கோபமாய் வந்தது . டேய் இந்தாங்கடா உங்க 500 ரியால் காசு,என் சில்லறை காச கொடுங்க என்று 500 ரியாலை அவங்க மூஞ்சி மேல வீசினேன். அவங்க உடனே உன்கிட்ட எவன்டா வாங்குவான்னு சில்லறையை திருப்பி தந்துட்டு திரும்பி நடந்தார்கள் .
                                        அப்போது என் நண்பன் வந்தான் ,நான் நடந்தது எல்லாம் சொல்லி பாருடா செவிட்டு பயல்கள் 18 ன்னு சொன்னதை பத்துன்னு கேட்டு புட்டு முட்டா பயல்கள் கேவலமா திட்டிட்டு வேற போயிட்டார்கள் என்றேன் .                                                                 
                                                              இரு இரு அவங்க கொடுத்த மீதி பணத்த எண்ணி பாத்தியா அப்ப யாரு முட்டாள்ன்னு தெரியும் என்றான் .  சுரீர் என்று எனக்கு உரைத்தது என்ன பயன் ஓடி போய் காச எண்ணி பார்த்தால் ரெண்டு  50  ரியால் நோட்டும் எட்டு 10 ரியால் நோட்டு மட்டும் இருந்தது .                                                          
                                                    என் முன்னாடிதான் காச எண்ணினான் .காச நீட்டி நீட்டி பேசினான் எப்ப காச எடுத்து மாத்தினான் என்று தெரியல. .உட்கார்ந்து யோசிப்பாங்களோ!!!

4 கருத்துகள்:

  1. ம்ம்... நம்ம ஊரைவிட மோசமா இருப்பாய்ங்க போல.... சூதானமா இருங்கப்பூ....

    பதிலளிநீக்கு
  2. என் முன்னாடிதான் காச எண்ணினான் .காச நீட்டி நீட்டி பேசினான் எப்ப காச எடுத்து மாத்தினான் என்று தெரியல. .உட்கார்ந்து யோசிப்பாங்களோ!!!

    ----------------

    நல்ல அனுபவம்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி பழமை பேசி அவர்களே வருகைக்கும் கருத்துரைக்கும்

    பதிலளிநீக்கு
  4. என் முன்னாடிதான் காச எண்ணினான் .காச நீட்டி நீட்டி பேசினான் எப்ப காச எடுத்து மாத்தினான் என்று தெரியல. .உட்கார்ந்து யோசிப்பாங்களோ!!!

    ----------------

    நல்ல அனுபவம்...


    நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

    பதிலளிநீக்கு